“பேசாதவனைத் தூக்கி வைக்கிறார்கள், பேசுபவனைத் தூக்கி எறிகிறார்கள்” – சீமான் பரபரப்பு பேச்சு…..!

பேசாதவனைத் தூக்கி வைக்கிறார்கள், பேசுபவனை தூக்கி எறிகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்வில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, பேசாதவனைத் தூக்கி வைக்கிறார்கள், பேசுபவனை தூக்கி எறிகிறார்கள் என்று தெரிவித்தார். நல்ல வேளை தன்னைத் தோற்கடித்து சட்டமன்றத்திற்குள் நுழையவிடாமல் செய்தீர்கள். இல்லையெனில், ஐந்து, ஆறு பேரோடு தான் சட்டமன்றத்திற்குள் நுழைந்திருந்தால், எல்லோரும் வெளியில்தான் நின்றிருப்பார்கள் என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் ஆன பிறகுதான் அவருக்கு கடன் இருப்பதே தெரிகிறது என்று விமர்சித்தார். மேலும், அந்த 6 சிலிண்டர்களை அவர்கள் எப்படித் தரப் போகிறார்கள் என்பதைத் தான் பொறுத்திருந்து பார்க்கப் போவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *