ரோஹித் ஷர்மா, விராட் கோலி இருவரும் ஒப்பனை அறையின் உள்ளே சென்று ஆரத் தழுவி வாழ்த்துக் கூறிய இனிய தருணங்கள்…!
ரவிச்சந்திரன் அஸ்வின், முகமத் ஷமியின் கைகளை பற்றி கைகுலுக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள் உடை மாற்றும் அறைக்கே சென்று ஆர்வ மிகுதியாலும் அதீத உணர்ச்சி மேலீட்டாலும் கட்டித் தழுவி கைகுலுக்கி உள்ளார். உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியே காணாது வெற்றி மட்டுமே பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்தியா.
மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துடன் இந்தியா அரையிறுதி போட்டியில் விளையாடியது. அப்போது இரு அணிகளும் சிறப்பாக ஆட இந்தியாவுக்கு கடினமான தருணத்தை அளித்தது நியூசிலாந்து. வெற்றி பெறுவோமா என்று ரசிகர்கள் தங்கள் இருக்கையின் முன் அமர்ந்து படபடக்க வைத்தது இந்த போட்டி.
சரியான நேரத்தில் களம் இறங்கிய ஷமி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அவர் ஒருவரே 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு கரையேற்றினார். 50 ஓவர்களீல் 397 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா. அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடி விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து வெல்லும் என்று அனைவரும் நினைத்த தருணத்தில் ஷமி அதிரடியாக விக்கெட் மழை பொழிய நியூசிலாந்து தோல்வியடைந்தது.
அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது தான் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட்டு வீரர்கள் உடை மாற்றும் அறைக்கே சென்று கோலி மற்றும் ஷமியை ஆரத் தழுவி வாழ்த்துக் கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.