அமெரிக்காவில் சான்ஃபிரான்சிஸ்கோவில் நடைபெறும் APEC 2023 மாநாட்டில் உலக நாடுகள் பங்கேற்றுள்ளன. 2023 ஆம் ஆண்டு நவம்பர் 13- ஆம் தேதி தொடங்கி நவம்பர் 16- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. IPEF மாநாட்டைத் தொடர்ந்து APEC 2023 தற்போது சான்ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்று வருகிறது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளார்.
APEC 2023 மாநாட்டில் முக்கியமாக நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதி, தொழில்நுட்பம் பின்னடைவு, கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவை பற்றி கருத்து தெரிவிக்கவும் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது. உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்கா ஒரு முக்கியமான மையமாக இருக்கிறது. $501 பில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், சான் பிரான்சிஸ்கோ பெருநகரப் பகுதி அமெரிக்காவின் நான்காவது பெரிய பொருளாதார மையமாக உள்ளது.
மேலும் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி உலகின் மிகப் பெரிய ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் அனைத்திற்கும் மையமாக செயல்படுகிறது. (டெஸ்லா, உபெர், சேல்ஸ்ஃபோர்ஸ், பிக்ஸார், நெட்ஃபிக்ஸ், லூகாஸ் ஃபில்ம் லிமிடெட், லெவி ஸ்ட்ராஸ்), மற்றும் செயற்கை நுண்ணறிவில் மிகவும் புதுமையான சில. பயோடெக், மென்பொருள், சுத்தமான தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம் போன்றவற்றில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
உலக நாடுகள் இந்த முக்கியமான சந்திப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பின்வரும் நாட்களில் உலக அளவில் விரிவடைய செய்ய கருத்துக்கள் பரிமாறப்பட்ட சிறப்பு வாய்ந்த மாநாடு என்பது குறிப்பிடத் தக்கது.