மியாமி ஓப்பன் டென்னிஸ் – ஜோகோவிச் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

Miami open 2025 : மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் மியாமி நகரில் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச், அர்ஜெண்டினாவின் கமிலோ உகோ கராபெல்லியை ஆறுக்கு ஒன்று, ஏழுக்கு ஆறு என்கிற கணக்கில் வீழ்த்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் அவர் இத்தாலியின் லாரன்சோ முசேட்டியை எதிர்கொள்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, ரஷ்யாவின் மீரா ஆண்ட்ரீவா ஆகியோர் விளையாடினர். இந்த ஆட்டத்தில் ஏழுக்கு ஆறு, இரண்டுக்கு ஆறு, ஆறுக்கு மூன்று என்கிற கணக்கில் அமெரிக்க வீராங்கனை வெற்றிபெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *