Advertisements

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் திடீரென தனது பதவியை ராஜினமா செய்ததையடுத்து, மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளாா்.
குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநா்களை நியமித்துள்ளார். இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேற்கு வங்க ஆளுநா் சி.வி. ஆனந்தபோஸின் ராஜினமாவை குடியரசுத் தலைவா் ஏற்றுக்கொண்டாா்.
அதோடு, புதிய ஆளுநா்கள் மற்றும் துணைநிலை ஆளுநா்களை நியமித்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா். இதில், கேரள ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகருக்குத் தமிழக ஆளுநா் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாகாலாந்து புதிய ஆளுநராக நந்த் கிஷோா் யாதவும், தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா மகாராஷ்டிர ஆளுநராகவும், பிகாா் மாநில ஆளுநராக செய்யது அடா ஹஸ்னைனும், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராகவும், லடாக் துணைநிலை ஆளுநா் கவீந்தா் குப்தா, ஹிமாசல பிரதேச ஆளுநராகவும், தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா, லடாக் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
Advertisements





