
9-சவரன் நகைக்காக சந்தேகத்தின்பேரில் அஜித்குமார் முதுகில் இவ்வளவு அடி அடித்தீர்கள் என்றால், ஆயிரம் கோடி ஊழல் செய்த அமைச்சர்கள் முதுகில் எவ்வளவு அடி அடிக்க வேண்டும் என்று சென்னை-சைதாப்பேட்டையில், பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவதூறாக பேசியதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினரை, காவல்துறையினர், காவல் பேருந்தில் ஏற்றிச் சென்றனர். அதன்பின்னர் பா.ஜ.க.மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, யாரையுமே போராட்டத்திற்கு வரக்கூடாது என்றால் தமிழ்நாட்டில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, உள்துறை அமைச்சரை மோசமான வார்த்தையில் பேசுவார். அதை அனுமதிப்பீர்கள், ஆனால் நாங்கள் அதை கண்டித்து குரல் எழுப்பினால், அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும், இதற்கெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்த அவர், 9-சவரன் நகைக்காக சந்தேகத்தின்பேரில் அஜித்குமார் முதுகில் இவ்வளவு அடி அடித்தீர்கள் என்றால், ஆயிரம் கோடி ஊழல் செய்த அமைச்சர்கள் முதுகில் எவ்வளவு அடி அடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.



