
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் பிறந்ததினம்! R. K. Narayan
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர், இந்திய நாவல் ஆசிரியர் ஆர்.கே.நாராயணன் அக்டோபர் 10 ஆம் தேதி 1906ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் எழுதிய The guide என்ற புத்தகம் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றது.
இவரின் உணர்ச்சிப்பூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப்பட்டவையாகும். முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர்.
இவர் பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் 2001ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி அன்று மறைந்தார். R. K. Narayan


