கார்கில், போராளிகளுக்கு நாடே நன்றிக் கடன்பட்டுள்ளது – பிரதமர் மோடி!!

1999ஆம் ஆண்டு கார்கில் போரில் நாட்டைக் காக்கும் கடமையில் துணிவுடனும் வீரத்துடனும் செயல்பட்ட படைவீரர்களுக்கு நாடே நன்றிக் கடன் பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கார்கில் வெற்றி நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவைக் காக்கும் கடமையில் துணிவுடனும் வீரத்துடனும் செயல்பட்ட நமது படைவீரர்களுக்கு நாடே நன்றிக் கடன் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

மிகக் கடுமையான காலநிலையிலும் அவர்களின் முகத்தில் தெரிந்த துணிவு நம் நாட்டின் பெருமிதமாக எப்போதும் விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். படைவீரர்களின் அசைக்க முடியாத நாட்டுப்பற்றும், கடமை மீதான அர்ப்பணிப்பும் எதிர்காலத் தலைமுறையினருக்கு உந்துதலாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *