“தலைமுடி அடர்த்தியாக” – இந்த பொருட்கள் மட்டும் போதும்…!

Advertisements

வீட்டில் எளிமையாகக் கிடைக்கும் இரண்டு பொருட்களை வைத்து ஈஸியான ஹேர் பேக் செய்து தலைமுடி அடர்த்தியாக்குவது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பெண்கள் தங்களது கூந்தல் பராமரிப்பில் பெரும் கவனத்தை செலுத்தி வருகின்றனர். அதாவது தற்போது இயற்கை முறையில் உள்ள எளிய பயனுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி தங்களது தலைமுடியை பாதுகாத்து வருகின்றனர்.

அதாவது தலைமுடி நீளமாக, அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். அல்லது நீளமாக இல்லாவிட்டால் கூட முடி உதிராமல் அடர்த்தியாக வளர வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம்.

அந்த வகையில் வீட்டில் எளிமையாகக் கிடைக்கும் இரண்டு பொருட்களை வைத்து ஈஸியான ஹேர் பேக் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்… இந்த ஹேர் பேக் செய்யத் தேவையான பொருட்கள் வெந்தயம் இரண்டு ஸ்பூன், செம்பருத்தி 5, மற்றும் செம்பருத்தி இலைகள் ஆகும்.

முதலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அடுத்த நாள் ஊற வைத்த வெந்தய விதையில், செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளைக் கலந்து மென்மையாகப் பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை உங்கள் தலைமுடியில் தடவி உலர்த்தி பின்னர் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

இந்த அற்புதமான ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி நன்கு அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர ஆரம்பிக்கும். இவ்வாறு வீட்டில் எளிதாகக் கிடைக்கும் வெந்தயம் மற்றும் செம்பருத்தியை பயன்படுத்தி தலைமுடியின் அடர்த்தியையும் அழகையும் அதிகரிக்கலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *