
எல்டர்பெர்ரி என்பது ஐரோப்பா, வட அமெரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் வளரும் கருப்பு எல்டர் மரத்தின் அடர் ஊதா பெர்ரி ஆகும். பழங்காலத்தில் இருந்தே, சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளைச் சரி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
அதிகம் அறியப்படாத எல்டர்பெர்ரி பழம், சளி, காய்ச்சல் போன்ற பருவக்கால நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் சரியான சூப்பர் ஃபுட் என்று நம்பப்படுகிறது.
தினசரி எல்டர்பெர்ரி ஜூஸ் குடிப்பதால், உங்கள் குடல் பாக்டீரியாவில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படுவதோடு மேம்பட்ட வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுத்து, எடை இழப்புக்கு உதவுவதாகச் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
எல்டர்பெர்ரி என்பது ஐரோப்பா, வட அமெரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவில் வளரும் கருப்பு எல்டர் மரத்தின் அடர் ஊதா பெர்ரி ஆகும். பழங்காலத்தில் இருந்தே, சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளைச் சரி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
எல்டர்பெர்ரி பழத்தை எப்படி சாப்பிடுவது?
- எல்டர்பெர்ரி பழத்தைப் பொதுவாகப் பச்சையாக உட்கொள்ளப்படுவதில்லை. ஏனென்றால் அதில் நச்சுகள் அல்லது சயனைடு உற்பத்தி செய்யும் பொருட்கள் இருப்பதால் குமட்டல், வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். ஆகவே அவற்றைச் சமைத்து நச்சுக்களை அகற்றுவதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
- ஒருவேளை இதை எவ்வாறு உட்கொள்வது எனத் தெரியாவிட்டால், சளி அல்லது காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க எல்டர்பெர்ரி காப்ஸ்யூல்கள், லோசன்ஜ்கள் மற்றும் சிரப்கள் கிடைக்கின்றன.
- எல்டர்பெர்ரி சிரப்பை தயாரிப்பதற்கு, அதன் தண்டுகளை அகற்றி, தண்ணீர் மற்றும் சர்க்கரையில் பெர்ரிகளை சமைத்து, வடிகட்டி, சிரப் போன்ற நிலைத்தன்மையைப் பெறும் வரை திரவத்தைக் கொதிக்க வைக்க வேண்டும்.
எல்டர்பெர்ரியில் உள்ள ஊட்டச்சத்து:
எல்டர்பெர்ரி பழம் ஏராளமான வைட்டமின் சி, உணவு நார்ச்சத்து, பினோலிக் அமிலம், ஃபிளவனால்கள் மற்றும் அந்தோசயினின்கள் கொண்ட ஆக்ஸிஜனேற்றங்களின் களஞ்சியமாகும். ஒரு கப் (145 கிராம்) பெர்ரிகளில் சுமார் 106 கலோரிகள், 26.7 கிராம் கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் ஒரு கிராமுக்கும் குறைவான கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது.
ஆய்வில் என்ன தெரிய வந்தது?
எல்டர்பெர்ரி ஜூஸை உட்கொண்டவர்களுக்கு, ஃபர்மிகியூட்ஸ் மற்றும் ஆக்டினோ பாக்டீரியா போன்ற பாக்டீரியாக் குழுக்கள் உட்பட குடல் நுண்ணுயிரிகளின் அளவை அதிகரித்ததாகக் கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த ஜூஸ் பாக்டீராய்டுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவையும் குறைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேம்படுத்தப்பட்ட வளர்சிதை மாற்றம்:
இந்த நேர்மறை நுண்ணுயிர் மாற்றங்கள் காரணமாக, மேம்பட்ட வளர்சிதை மாற்றமும் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர் ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் மேம்படுத்த உதவும்.
சிறந்த சர்க்கரை கட்டுப்பாடு:
எல்டர்பெர்ரி ஜூஸ் குடிப்பதால் ரத்த குளுக்கோஸ் அளவை சுமார் 24 சதவிகிதம் குறைக்கிறது. அதாவது இந்த ஜூஸ் கார்போ ஹைட்ரேட் நுகர்வுக்குப் பிறகு சர்க்கரைகளை செயலாக்கும் உடலின் திறனை மேம்படுத்துகிறது.
கொழுப்பு குறைதல்:
அதிக கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவுக்குப் பிறகு மற்றும் உடற்பயிற்சியின்போது கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அல்லது கொழுப்பு அமிலங்களின் முறிவுக்கு எல்டெர் பெர்ரி ஜூஸ் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அழற்சி எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்ட தாவர அடிப்படையிலான உயிரியக்க கலவைகளான அந்தோசயினின்கள் இருப்பதால் இது நடந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மற்ற பெர்ரிகளிலும் அந்தோசயினின்கள் இருந்தாலும், அவற்றின் செறிவு குறைவாகவே இருக்கும். உதாரணமாக, ஆறு அவுன்ஸ் எல்டர்பெர்ரி சாற்றில் காணப்படும் அந்தோசயனின் உள்ளடக்கத்தைப் பெற, ஒருவர் தினமும் நான்கு கப் ப்ளாக்பெர்ரிகளை உட்கொள்ள வேண்டும்.
