மேல்-சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

Advertisements

புதுடெல்லி:

Advertisements

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே அதானி குழுமம்மீதான குற்றச்சாட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் முடங்கின.

இதற்கிடையே மேல்-சபையின் அவைத் தலைவர் ஜெகதீப்தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளித்தன.

இந்த நிலையில் பாராளுமன்றம் இன்று காலைக் கூடியது. காலை 11 மணிக்கு மேல்-சபை கூடியதும், ஆளும் கட்சியைச் சேர்ந்த பல எம்.பி.க்கள், அவைத் தலைவர் தங்கரை காங்கிரஸ் தலைவர்கள் அவமதித்ததாகக் குற்றம் சாட்டினர்.

விவசாயியின் மகனை எதிர்க்கட்சியினர் அவமதிப்பதாகக் கூறினர். நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கண்டித்து பா.ஜ.க. எம்.பி ராதா மோகன் தாஸ் பேசினார். பா.ஜ.க. எம்.பியின் பேச்சுக்கு எதிர்ப்பு எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.

அப்போது ஜெகதீப்தன்கர் கூறும்போது, நான் ஒரு விவசாயியின் மகன். நான் பலவீனத்தைக் காட்டமாட்டேன். என் நாட்டிற்காக என் உயிரைத் தியாகம் செய்வேன். நான் நிறைய சகித்துக் கொண்டேன். தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் அரசியலமைப்பை அவமதிக்கிறீர்கள் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகப் பேசுவதற்கு பா.ஜ.க. உறுப்பினர்களை ஊக்குவிக்கிறீர்கள். நானும் விவசாயியின் மகன்தான். உங்களைவிட அதிக சவால்களை நான் எதிர்கொண்டு உள்ளேன்.

எங்கள் கட்சி தலைவர்களை அவமதிக்கிறீர்கள், காங்கிரசை இழிவு படுத்துகிறீர்கள். உங்கள் புகழைக் கேட்க நாங்கள் இங்கு வரவில்லை. விவாதத்திற்கு வந்துள்ளோம் என்றார்.

தொடர்ந்து தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் நோட்டீஸ் வர முதலீட்டாளர் ஜார்ஜு டன் காங்கிரஸ் தலைமையின் தொடர்புபற்றிய பா.ஜ.க.வின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரு தரப்பு உறுப்பினர்களிடையே கூச்சல்-குழப்பம் நிலவியது.

இதையடுத்து மேல்-சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார். 16-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *