
லஸ்கர் இ தொய்பா இயக்கத்தின் பகராளான ரெசிஸ்டன் பிரன்டை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.
காஷ்மீரின் பகல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரைச் சுட்டுக்கொன்றதாகப் பொறுப்பேற்ற ரெசிஸ்டன்ட் பிரன்ட் அமைப்பு லஸ்கர் இ தொய்பாவின் பகராளாகும்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த அமைப்பை வெளிநாட்டுப் பயங்கரவா அமைப்பு என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவேற்புத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



