
நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சாய் பல்லவி உள்ளிட்ட தண்டல் படக்குழுவினர் இன்று காலைத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அல்லு அரவிந்த் மற்றும் பன்னி வாசு தயாரிப்பில் உருவாகியுள்ள தண்டல் திரைப்படம், நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று காலை விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அவர்களுக்குத் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி, வேத பண்டிதர்கள் ஆசீர்வாதம் வழங்கினர்.
