
தமிழக அரசியலில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய தேர்தல் களம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது ஆளும் கட்சியான தவெகவின் கூட்டணியில் புதிய குழப்பங்களும் விவாதங்களும் வெடித்துள்ளன. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகியும் மாநில முதன்மை செயலாளருமான ஆளூர் ஷா நவாஸ் அளித்துள்ள பேட்டி, அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதில், அவர், “பாஜகவின் கைப்பாவையான தேர்தல் ஆணையம் நியமித்த தலைமை செயலாளரை தவெக மாற்றாதது ஏன்? சாய் குமாரின் பணி காலத்தை நீடித்தது சந்தேகத்தை எழுப்புகிறது.எல்லோரையும் மாற்றிய இந்த அரசு.. ஏன் சாய் குமாரை மாற்றவில்லை? இதனால் , தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது என்று சொல்லியிருக்கிறார்.. இதற்கு பதிலடியாக பாஜகவை பார்த்து தமிழக அரசு பயப்படவில்லை என அமைச்சர் வன்னி அரசு கூறியிருந்தார்.
இந்நிலையில் , விசிகவில் உள்ள நிர்வாகிகள் மாறி மாறி முரண்பட்ட கருத்துக்களை முன்வைப்பதால் , தவெக – விற்கு பெரும் தலைவலியை இது உருவாக்கி உள்ளது.. இது பற்றிய தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்.!
யார் இந்த ஆளூர் ஷா நவாஸ் …இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராகப் இயங்கி வருகிறார்.நாகப்பட்டினம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆளூரைச் சேர்ந்த இவர், சிறந்த பேச்சாளர், ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். சமூக நீதி, பெரியார், அம்பேத்கர் மற்றும் காயிதே மில்லத் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்.தொலைக்காட்சி விவாதங்களில் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவாகவும் தாக்கியும் பேசக்கூடிய முன்னணித் தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
தேர்தல் நேரங்களில் இவருக்கும் கட்சி தலைவர் திருமாவுக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போது, இவரை திமுகவின் கைக்கூலி என்று அக்கட்சியினரே பேசிவந்தனர்..சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்து அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், ஆளூர் ஷ நவாஸ் தவெகவுக்கு எதிராக பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழத்தின் தலைமையிலான அரசில் பங்கெடுத்திருக்கும் விசிக, அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வரும் வேலையில் , ஷா நாவாஸின் பேச்சுக்கள் திருமாவளவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது…இந்நிலையில் , தவெக குறித்து பேசும்போது, “தலைமை செயலாளர் என்பவர் ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் முக்கியமான அதிகாரியாவார். அவர்தான் அதிகாரிகளுக்கு தலைமையே. போலீஸ் என்ன செய்ய வேண்டும், கலெக்டர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வார்.
அதிகாரிகளை மாற்றுவது சாதாரண விஷயமல்ல. ஆட்சியமைத்து எல்லோரையும் மாற்றிய தவெக ஏன் தலைமை செயலாளர் சாய்குமாரை மாற்றவில்லை.தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சாய்குமாருக்கு கால நீட்டிப்பு செய்துள்ளனர். இதுவெல்லாம் நமக்கு மறைமுகமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டியதில்லை என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டை மறைமுகமாக பாஜக தான் ஆள்கிறது. பாஜகவின் கைப்பாவையாக தவெக உள்ளது. தவெகவுடன் பயணிப்பதில் எங்கள் தலைவர் திருமாவளவனுக்கு நெருடல் உள்ளது.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் டம்மியாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் மீது உணர்வுள்ள அதிகாரிகளை டம்மியாக்குவது ஏன். நான் இதை மிகவும் தெளிவாக சொல்கிறேன். அதிகாரிகளின் மாற்றம் இயல்பானது.திமுக ஆட்சியில் நியமித்த உயரதிகாரிகள் டம்மியாக்கப்பட்டு, பாஜக ஆட்சியில் நியமித்த தலைமை செயலாளர் நியமிக்கப்படுகிறார் என்றால் என்ன அர்த்தம். அதுதான் தற்போது மாணவர் போராட்டம் வரை தொடர்கிறது. ராகுல் காந்தி எவ்வளவோ முட்டி மோதி பார்த்தார்.தமிழகத்தை போல வேறு எங்காவது இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டதா. திமுக இல்லாமல் உங்களால் கூட்டணி அமைக்க முடியுமா.
ஏதாவது தெளிவு இருக்கிறதா. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமைந்துவிட்டதா. தவெக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமையவில்லை. இதுதான்காங்கிரஸ் நிலைமை. கூட்டணி அமைக்க முடியாமல் திணறி வருகிறார்கள். திமுக இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் கூட்டணி அமைக்க முடியவில்லை” என்றார்.ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் மூத்த நிர்வாகியே அரசை வெளிப்படையாக விமர்சித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. தவெக மற்றும் விசிக இடையேயான உறவில் விரிசல் விழுகிறதா அல்லது இது தேர்தல் அரசியலின் புதிய வியூகமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
எதிர்க்கட்சிகள் இந்தக் கருத்துகளை ஆயுதமாக ஏந்திவரும் நிலையில், இந்தச் சலசலப்புகளுக்கு ஆளும் தரப்பு எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறது மற்றும் விசிகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்னவாக இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




