மதம் மாறி திருமணம்: பெண் வீட்டாரின் வெறிச்செயல்..!

Advertisements

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நாகவாடாவில் டேனியல் – கலையரசி தம்பதியினர் வசித்து வர்ராங்க.இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.இந்த நிலையில்,ராகுல் அதே பகுதியை சேர்ந்த ராஜாராவ் மகள் கீர்த்தனாவை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதம் மற்றும் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு  பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அத மீறி ராகுலும் கீர்த்தனாவும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது திருமணத்தை பற்றி பேசியுள்ளனர்.அப்போது மீண்டும் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ஆனால் ,ராகுல் பெற்றோர் தனது மகனின் ஆசைக்காக சம்மந்தனம் தெரிவித்து உள்ளனர்.குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவோட, ராகுல் கடந்த 9-ஆம் தேதி தனது காதலியை வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்து, இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர்.இந்த சூழலில், வேளாங்கண்ணி ஆலயம் முன் ராகுலின் பெற்றோர் மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் முன்னிலையில் திருமணம் செஞ்சியிருக்காங்க.

இந்த தகவலை அறிந்த  கீர்த்தனாவின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் ராகுல் குடும்பத்தினரை தொடர்ப்புக் கொண்டு பேசியபோது, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும்,அவர்கள் இருக்கும் விவரத்தை கேட்கவே தங்கியிருக்கும் முகவரியை தந்துள்ளனர்.பின்னர், பெங்களூரில் வசிக்கும் இளம்பெண் கீர்த்தனாவின் குடும்பத்திலிருந்து சுமார் 15 பேர் உடனே வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர்.

அப்போது ராகுல் மற்றும் கீர்த்தனா தங்கியிருந்த விடுதியின் உள்ளே நுழைந்து ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதத்தால் தாக்கி, இளம்பெண்ணை பலவந்தமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.அப்போது தடுக்க முயன்ற ராகுல், அவரது தந்தை டேனியல், மாமா பிரகாஷ் மற்றும் அம்மா கலையரசி என எல்லாரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.இந்த சம்பவத்தை அறிந்த அக்கம்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த கன்னியாகுமரி காவல்துறையினர் வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்தவர்களை நாகை ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம்  குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடியவர்கள் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே போலீசார் மடக்கிப் பிடித்து வேளாங்கண்ணி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மதம் மாறி திருமணம் செய்ததைப் பெண்ணின் குடும்பத்தார் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் மாப்பிள்ளை குடும்பத்தினரைத் தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச் சென்றதாக பகீர் வாக்குமூலம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்திற்குக் காரணமான பெண்ணின் தாய், தந்தை, அவரது உறவினர்கள் வெங்கட் பிரபு, புனித்குமார், ராம், விஜய், ராகவ், கார்த்திக், மகேஸ்வரி, கவிதா உள்ளிட்ட பெண்ணின் குடும்பத்தினர் 9 பேரை வேளாங்கண்ணி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும்,கைது செய்யப்பட்ட 9 பேரும் கீழ்வேழூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்த பெங்களூரு காதல் ஜோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில்  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *