உலகக் கோப்பை ஸ்குவாஷ்:இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

Advertisements

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையிலும், நேரு பார்க்கிலும் ஐந்தாவது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இந்த, போட்டியின் கால்இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி, இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 3 – 0 என்ற செட் கணக்கில் டீகான் ரஸ்செலை தோற்கடித்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அபய் சிங் 3 – 0 என்ற செட் கணக்கில் வான் நிகெர்க்கை விரட்டியடித்தார். மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 3 – 0 என்ற செட் கணக்கில் ஹாய்லி வார்டை வீழ்த்தினார். இதையடுத்து, இந்திய அணி இன்று நடைபெறும் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *