
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை வென்று, சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. முதல்வர் யார் என்பதை அறிவிக்காமல், இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், நேற்று டெல்லி பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ரேகா குப்தா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். டெல்லி சட்டமன்ற பாஜக கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அவர், துணைநிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதற்கிணங்க, இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
