
உக்ரைனின் தாக்குதலுக்கு ரஷ்யா கண்டிப்பாக பதிலடி கொடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
உக்ரைன் 117 ட்ரோன்களை ஏவி, ரஷ்யாவின் விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ரஷ்யாவின் 30 போர் விமானங்கள் சேதமடைந்தது. மேலும் ரஷ்யா – கிரீமியாவை இணைக்கும் பாலமும் குண்டுகள் வைத்து தகர்த்தப்பட்டது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து ,’உக்ரைனின் தாக்குதல்களுக்கு ரஷ்யா பதிலடி உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வாய்பில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.



