
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தனது தலைமையில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த சீசனில் அவர் கேப்டன் பதவியை விலகிய நிலையில், இப்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் புதிய கேப்டனாக உள்ளார்.
தோனி, இந்தத் தொடரின் முடிவில் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவாரெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான எதிர்வினையாக, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.எஸ். தோனி மற்றும் சஞ்சு சாம்சன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, தோனியின் ஓய்வு குறித்து சஞ்சு சாம்சன், இன்னும் கொஞ்சம் விளையாடுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
