World AIDS Day: உலக எய்ட்ஸ் தினம்..

உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு  வருடமும் டிசம்பர் மாதம் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய  ஆலோசனை 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லட்சங்களைக் கடந்துள்ளது. 2007-ஆம் ஆண்டு வரை 332 லட்சம்  மக்கள் இந் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1996-ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது, எயிட்ஸ் மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும். எயிட்ஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும். ‘கல்வி மற்றும் விழிப்புணர்வு’ மட்டுமே எயிட்ஸ் தடுப்பிற்கான சிறந்த மற்றும் சரியான சமூக மருந்து என்பதை உணர்ந்து விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள் ஆகியவற்றில் எயிட்சு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்களை இடம்பெற செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை பரப்ப செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.

எச் ஐ வி பாதிப்பின் விவரங்கள்;

எச் ஐ வி பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும். 35 சதவீதம்  எயிட்ஸ் நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களே.
இந்தியாவில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்
எயிட்ஸ் நோயை  தடுக்க யுவா என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. யுவா என்பது ‘Youth Unite for Victory on Aids என்பதன் சுருக்கமாகும். அதாவது எயிட்ஸ்-ஐ வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம். இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, நேரு யுவ கேந்த்ரா,சாரணர் இயக்கம்,இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தன்னார்வ தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.

தமிழ்நாட்டில் எயிட்ஸ் தடுப்பு முயற்சிகள்;

2005 -06 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிதி ஆதரவில் ரெட் ரிப்பன் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது.
2005-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்திற்காக விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக அர்ஜெண்டினாவின் புவெனஸ் ஐரிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ள 67 மீட்டர் உயரமுள்ள ஆணுறை வைக்கப்பட்டுள்ளது.
1988-2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன் எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *