தோல் பராமரிப்பில் சன்ஸ்கிரீன் ஏன் முக்கியம்!

Advertisements

சன்ஸ்கிரீன் என்பது கடற்கரைக்குச் செல்லும் போதோ அல்லது வெயில் காலங்களில் மட்டும் பயன்படுத்துவது அல்ல. இது நமது தோல் பராமரிப்பு முறையின் வழக்கமான அங்கமாக இருக்க வேண்டும். ஆனால், பல நபர்கள் சூரிய ஒளியில் நீண்ட நேரம் செலவழிக்கும்போது மட்டுமே சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறார்கள். உண்மை என்னவென்றால், புற ஊதா கதிர்வீச்சு மேகமூட்டமான நாட்களில் அல்லது குளிர்காலத்தில் கூட உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

கோடை காலமோ அல்லது குளிர்காலமோ, வெளியிலோ அல்லது வீட்டின் உள்ளே இருந்தாலும், தீவிரமான மற்றும் அபாயகரமான புற ஊதா கதிர்வீச்சுக்கு நாம் தொடர்ந்து ஆளாகி வருகிறோம்.

இது நமது சருமத்தின் டிஎன்ஏ செல்களை அழித்துப் பல்வேறு தோல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் சன்ஸ்கிரீன் உங்கள் சருமத்தை நிறம் மாறுதல், கருமையாதல் மற்றும் சூரிய ஒளி சேதத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், இளமையிலேயே வயதான தோற்றம் மற்றும் சருமத்தின் செல் சேதத்தைத் தடுக்கிறது.

உங்கள் சருமப் பராமரிப்பில் ஏன் சன்ஸ்க்ரீன் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை காயா கிளினிக்கின் தோல் மருத்துவரும், தலைமை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் சுனிதா நாயக் பகிர்ந்துள்ளார்.

தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை சன்ஸ்கிரீன் பாதுகாக்கிறது. சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு, சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் உட்பட முன்கூட்டிய வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதால் ஆபத்தான புற ஊதா கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது.

சூரிய ஒளி பாதிப்பு மற்றும் தோல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.

தோல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது:

சூரியனால் ஏற்படும் சேதம் உங்கள் சருமத்தின் தோற்றத்தை மட்டும் பாதிக்காது. அதன் பொதுவான ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கும். புற ஊதா ஒளியானது சருமத்தின் இயற்கையான தடையைப் பாதிக்கிறது.

எரிச்சல், வீக்கம் மற்றும் தொற்றுக்கு அதன் பாதிப்பை அதிகரிக்கிறது. சன்ஸ்கிரீன் சருமத் தடையைப் பாதுகாத்து, அதை ஆரோக்கியமானதாகவும், வலுவாகவும், சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு எதிராக எதிர்க்கச் சிறந்ததாகவும் ஆக்குகிறது.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு:

சன்பர்ன் விரும்பத்தகாதது மட்டுமல்ல. கடுமையான தோல் சேதத்தையும் குறிக்கிறது. சன்ஸ்கிரீன் புற ஊதா கதிர்களைத் தடுப்பதன் மூலம் சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கிறது.

சன்ஸ்கிரீன் அப்ளை செய்வதன் மூலம், சூரிய ஒளியின் உடனடி தாக்கங்களைப் பற்றிக் கவலைப்படாமல் வெளிப்புற செயல்பாடுகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

முன்கூட்டிய முதுமையைத் தடுக்கிறது:

புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் முன்கூட்டிய முதுமைக்கு எதிராகச் சன்ஸ்கிரீன் பாதுகாக்கிறது. சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு தோலில் உள்ள கொலாஜன் சிதைவை ஏற்படுத்துகிறது.

இதன் விளைவாகச் சுருக்கங்கள் மற்றும் நெகிழ்வுத்தன்மை இழப்பு ஏற்படுகிறது. தினமும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினால், உங்கள் சருமத்தின் இளமையான தோற்றத்தைத் தக்கவைத்து மென்மையாகவும், உறுதியாகவும் வைத்திருக்க உதவும்.

தோல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது:

தோல் புற்றுநோய் என்பது உலகளவில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படுகிறது. தினமும் சன் ஸ்கிரீனைப் பயன்படுத்தினால், தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படும்.

தோல் புற்றுநோய் உடலில் எங்கும் உருவாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே முகம், கழுத்து, காதுகள் மற்றும் கைகள் போன்ற அனைத்து பகுதிகளுக்கும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *