Advertisements

திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்று புதுச்சேரி திமுக தேர்தல் குழு அமைப்பாளர் ஜெகத்ரட்சன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதுச்சேரி திமுக தேர்தல் குழு அமைப்பாளர் ஜெகத்ரட்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்றார்.
தொடர்ந்து, கூட்டணி தொடர்பாக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார். மேலும், செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விக்கும் தலைவர் தான் முடிவு எடுப்பார் என்று நழுவிச் சென்றார்.
Advertisements


