விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு – செல்வ பெருந்தகை

விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு ஆனால் எத்தகைய விமர்சனத்தை முன் வைக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று, கொழுமணிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கம் கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, அரசு துறையின் சேவைகளை பெறுவதற்கு விண்ணப்பித்தனர். முகாமில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான, செல்வ பெருந்தகை கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். நிகழ்ச்சியை தொடர்ந்து செல்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அரசு அலுவலகங்களை மக்கள் தேடி செல்லாமல், மக்களை தேடி அரசு அலுவலகங்களும், அரசு அதிகாரிகளும் வரும் திட்டம் தான், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முhகம் என்றும், இந்தியாவிலேயே எங்கும் இல்லாத மகத்தான ஒரு திட்டத்தை, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார் என்றும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டம் என்றும் தெரிவி;த்தார். மேலும், விமர்சனம் செய்வதற்கு, அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் எத்தகைய விமர்சனத்தை முன் வைக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *