புதிய நியாயவிலைக் கடை திறப்பு – அமைச்சர் காந்திராஜ்!

சின்ன மோசூர் பகுதியில் 12 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட  பகுதி நேர நியாய விலை கடையை, அமைச்சர் காந்திராஜ் திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சின்ன மோசூர் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 12 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ப்ரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக  கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ்  கலந்து கொண்டு, பகுதி நேர நியாய விலை கடை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சக்கரை உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.

 

இந்நிகழ்வில்,  மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா, வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், வட்டாட்சியர் வரலட்சுமி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *