Ramdev: உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பகிரங்க மன்னிப்பு கேட்டார்!

Advertisements

டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் யோகா மாஸ்டர் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்டார். பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்தப் பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியன. அதாவது, பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தைக் கடுமையாக எச்சரித்துக் கண்டனம் தெரிவித்திருந்தது.

எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. இருப்பினும் கடந்த 4 மாதங்களாகப் பதஞ்சலி இது போன்ற விளம்பரங்களை நிறுத்தவில்லை. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2ம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார்.

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது; உச்ச நீதிமன்றத்தில் யோகா மாஸ்டர் ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்டார். தவறாகக் கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீறமாட்டேன். பொது மன்னிப்பு கோரவும் தயாராக உள்ளேன். மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்?; நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? நீதிபதிகள் விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாகப் பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கு விசாரணை 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *