Uttarakhand tunnel collapse: 40 தொழிலாளர்களை மீட்க்கும் பணி தீவிரம் !

Advertisements

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்க ஒருங்கிணைந்த பல முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எற்கனவே உள்ளே சிக்கியுள்ள 40 பணியாளர்களுக்கு உணவு மற்றும் ஆக்சிஜன் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் நிலையில், அங்கு சுமார் 200 மீட்டர் பரப்பளவில் விழுந்துகிடக்கும் பாறைகளை வெட்டுவதில் மீட்புக் குழுக்கள் சிறிது முன்னேற்றத்தை கண்டுள்ளனர். புதிய இயந்திரம் ஒன்று அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisements

உள்ளே சிக்கிய தொழிலாளர்களை அடைய மீட்புப் பணியாளர்கள் “Escape Route” ஒன்றை உருவாக்க முயற்சிக்கின்றனர். மற்றும் பணியாளர்கள் சுமார் 40 மீட்டர் தூரத்தில் சிக்கியுள்ளதாகவும், சுரங்கப்பாதையைத் தடுக்கும் சுமார் 21 மீட்டர் ஸ்லாப் அகற்றப்பட்டுள்ளதாகவும், இன்னும் 19 மீட்டர் பாதை அகற்றப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழு ஏற்கனவே 30 மீட்டர் பாறைகளை வெட்டிய நிலையில், சிறிது மண் சரிவு ஏற்பட்டது. அதனை அடுத்து தற்போது மீண்டும் 21 மீட்டர் வரை அவர்கள் பாறைகளை அகற்றியுள்ளனர். மீட்புப் பணிகளைத் தாமதப்படுத்தும் தளர்வான குப்பைகள் உறுதிப்படுத்தப்பட்டு, இடிந்து விழுந்த சுரங்கப்பாதையின் 40 மீட்டர் தூரத்திற்கு ஷாட்கிரேட்டிங் மூலம் தோண்டும் பணி தொடங்கியுள்ளது.

சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக, 900 மிமீ விட்டம் கொண்ட குழாயை, ஹைட்ராலிக் ஜாக்கைப் பயன்படுத்தி, குப்பைக் குவியலில் துளையிட்டுத் தள்ள மீட்புக் குழுக்கள் திட்டமிட்டுள்ளன. இடிபாடுகளில் துளையிடுவதற்கு மீட்புப் பணியாளர்கள் AGUER இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த துணிச்சலான மீட்பு பணிக்கு தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் அந்த தளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிபுணர்களும் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளனர். பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அந்த சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் சிக்கினர்.

ஒரு இடையக மண்டலத்தில் (Buffer Zone) சிக்கியுள்ள தொழிலாளர்கள், அவர்கள் பாதிப்பில்லாமல் உள்ளனர் மற்றும் நீர் குழாய்கள் மூலம் உணவு மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. “அவர்கள் நடக்கவும் சுவாசிக்கவும் சுமார் 400 மீட்டர் இடம் அங்கு உள்ளது” என்று பேரிடர் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *