Ram Mandir Ayodhya Inaugration: 1008 தீபம் ஏற்றி வழிபாடு!

Advertisements

திருப்பூரில் அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் முன்பாக 1008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார்.

திருப்பூர்: அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் முன்பாக 1008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில்பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு
சார்பில் அயோத்தியில் நடைபெறவுள்ள ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 1008 தீபம் ஏற்றி வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு ஆர்.எஸ்.எஸ். பெருங்கோட்ட செயலாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி, நடிகர் ரஞ்சித் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்கள்.

விழாவிற்கு பாஜ இந்து அமைப்பினர் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு 1008 தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *