திமுக – பாஜக கூட்டணி சாத்தியமா? திசைமாறும் தமிழக அரசியல் களம்..!

Advertisements

மதவாதக் கட்சி, மக்கள் விரோத ஆட்சி’ என்றெல்லாம் சகட்டுமேனிக்கு மத்திய பா.ஜ.க-வை வசைபாடி வந்தது தி.மு.க., இப்போது அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க ஆயத்தமாகிவிட்டதாக தகவல்கள் பறக்கின்றன. அதை பற்றிதான் பார்க்கப்போகிறோம்..

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல. மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் முடிவுரையும் எழுதிவிட்டது. இதனால், செய்வதறியாது திகைத்து நிற்கிறது தி.மு.க. அந்த தி.மு.க. இப்போது ஆட்சி அதிகாரத்தையும், கூட்டணிக் கட்சிகளையும் இழந்து நிற்கிறது. அதிலிருந்து மீள முடியாமல் உட்கட்சி விவகாரங்களிலும், எதிர்க்கட்சி அரசியலிலும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

ஆகையால், கட்சியை மீட்டெடுக்கவும், சூழ்ந்திருக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்கவும், அதிகாரம் தேவை என்ற கமலாலய ஆபர்களை பரிசீலிக்க முடிவெடுத்திருக்கிறது. அதனால்தான் பாராளுமன்றத் தொகுதி மறுவரையறையைத் தீர்க்கமாக எதிர்த்தது தி.மு.க. இப்போது தனது நிலைப்பாட்டை தைரியமாக வெளிப்படுத்தாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது. இது பா.ஜ.க அமைச்சரவையிலும், கூட்டணியிலும் தி.மு.க பங்கேற்கப்போவதற்கான சிக்னலாக இருக்கலாம்.

தமிழகத்திற்கும் டில்லிக்குமான போர் என நரேட்டிவ் செட் செய்துதான் 2026 சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. சந்தித்தது.. பா.ஜ.க-வை மத்தியிலிருந்து அகற்ற வேண்டுமென காங்கிரசின் கரத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே வலுப்படுத்தியும் வந்தது. அதை மக்கள் நிராகரித்ததுடன், கூட்டணிக் கட்சிகளும் கைகழுவின. கொள்கைக் கூட்டணி என மூச்சுக்கு முந்நூறு முறை சொன்ன திருமாவளவன், இடதுசாரித் தலைவர்களும்கூடக் கைவிட்டுவிட்டனர்.

காங்கிரசை கூட்டணியில் வைத்திருந்ததற்காக அமலாக்கத்துறையின் அளவில்லா அடக்கு முறைக்கு ஆளானது தி.மு.க. மாநிலத்தில் ஆளும் தரப்பாக இருந்தும், மத்தியிலிருந்து நிதி பெற முடியாமல் திணறியது. காங்கிரசுக்கு நேர்மையான தோழமையாக இருந்தது. அப்படிப்பட்ட தி.மு.க-வை அமைச்சர் பதவிக்காக உதறிவிட்டுச் சென்றுவிட்டன தோழமைக் கட்சிகள். அப்படியென்றால், தி.மு.க. மட்டும் காங்கிரசுக்கும், காங்கிரசை முன்னிறுத்தும் இண்டி கூட்டணிக்கும் ஏன் வலுசேர்க்க வேண்டும்.

தங்களைத் தாழ்த்திக்கொண்டு இண்டி கூட்டணிக்குப் பாடுபட வேண்டுமா. இரண்டு எம்.எல்.ஏ-க்களை வைத்துக்கொண்டு வி.சி.க-வும் ஐ.யூ.எம்.எல்-லும் அமைச்சரவையில் பங்கேற்கும்போது 22 எம்.பி-க்களை வைத்துக்கொண்டு, தாங்கள் ஏன் சும்மா இருக்க வேண்டும்… எனவே, த.வெ.க ஆட்சிக்கு நிகரான அதிகாரத்துடன் வலம்வர மத்திய அமைச்சரவையில் பங்கெடுக்க வேண்டும் என்ற கருத்தும் தி.மு.க.வுக்குள் உருவாகியிருக்கிறது.

எதிரியான அ.தி.மு.க-வுடனேயே கைகோக்கத் தயாரான தி.மு.க-வுக்கு, பா.ஜ.க-வுடன் அணி சேருவது பெரிய விஷயமல்ல. இப்போதெல்லாம் மாறும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பதுதான் புத்திசாலித்தனம் என்பதை அண்ணாவும் கருணாநிதியுமே திமுகவுக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். 2001 முதல் – 2004 காலகட்டத்தில் தி.மு.க ஆட்சியில் இல்லாவிட்டாலும், மத்திய அமைச்சரவையில் தி.மு.க நீடித்ததால் கட்சி வலுவாக இருந்ததையெல்லாம் கூர்ந்து கவனிக்கு வேண்டும்.

இண்டி கூட்டணியிலிருந்து தி.மு.க வெளியேறியதை, கொண்டாட்ட மனநிலையுடன் அணுகுகிறது டில்லி பா.ஜ.க.. கடந்த மே மாத இறுதியில் கூர்க்-குக்குச் சென்ற ஸ்டாலின் குடும்பத்தினருடன் நேரடிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அதன்படி, மத்திய அமைச்சரவையில் பங்கேற்க தி.மு.க-வுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை ஆதரிக்கச் சொல்லியும் கேட்டிருக்கிறது பா.ஜ.க..

இது போக, விஜய்க்குக் குடைச்சல் ஏற்படுத்தும் விதமாக கரூர் சி.பி.ஐ விவகாரம், குதிரைப் பேர விவகாரத்தில் நடவடிக்கை, வாய்ப்பிருந்தால் ஆட்சிக்கே சிக்கல் ஏற்படுத்துவது என தி.மு.க-வின் அஜண்டாக்களுக்கு உதவிடவும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. நிதி, கல்வி, ரயில்வே போன்ற முக்கிய இலாகாக்களை தி.மு.க பெற்றுக் கொண்டால், தமிழகத்தில் இணை அரசாங்கத்தை நடத்தலாம் எனச் சொல்லப் பட்டிருக்கிறது.

இது ஒரு கூட்டணி என்பதைவிட தி.மு.க-வுக்கு ஒருவிதப் பாதுகாப்பு என்கிற அடிப்படையில் ஆபர் கொடுத்திருக்கிறதாம் மத்திய பா.ஜ.க. .
பா.ஜ.க-வுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணியை எந்தவொரு மாநிலமும் கட்டத் தவறிய நிலையில், அதைச் சாத்தியப்படுத்தி மூன்று பொதுத்தேர்தல்களில் வெற்றியும் பெற்றுக்கொடுத்தார் ஸ்டாலின். ஆனால், தற்போது திடீரென பா.ஜ.க-வுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதை சொந்தக் கட்சியினரே ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழும். அவ்வாறு நடந்தால் ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் வாக்குகளும் த.வெ.க-வுக்குச் சென்றுவிடும்.

தேசிய அரசியலில் காங்கிரசை வீழ்த்த உதவும் இந்த முடிவு, மாநில அரசியலில் தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவைத் தரக்கூடிய அபாயமும் இருக்கிறது. மத்திய அமைச்சரவையில் தி.மு.க பங்கெடுத்தால், பா.ஜ.க-வுடன் கைகோத்து தி.மு.க-வும் மாநில உரிமைகளைச் சிதைக்கிறது. நிதி தர மறுக்கிறது. என எளிதாகப் பழி சுமத்திவிடுவார் முதல்வர் விஜய். மேலும் பா.ஜ.க-வுக்கு எதிராக காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற ஜென் ஸி புரட்சி தொடங்கியிருக்கும் சூழலில், பா.ஜ.க-வுடன் கைகோப்பது நல்ல முடிவாக இருக்காது.

ஆட்சி அதிகாரம் இல்லாத பதற்றத்தில் எதிர்காலம் குறித்து யோசிக்காமல் வரலாற்றுப் பிழையை தி.மு.க செய்துவிடக் கூடாது என அஞ்சுகிறார்கள் உடன்பிறப்புகள் சிலர். அதிகாரம் இல்லாத சூழலில், அதைத் தேடிப்போவதில் தவறில்லை என்கின்றனர் இன்னொரு தரப்பு உடன்பிறப்பிகள். இந்த கணக்கு உண்மையோ என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பாராளுமன்றத்தை நோக்கி செல்லும் போராட்டத்தை நடத்தியது.

அப்போது போலீசார் இளைஞர்கள் மாணவர்களை களைந்து செல்ல தடி அடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.
அதை எதிர்த்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கண்டனம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசு நடத்தும் தேர்வில் முறைகேடு நடந்ததாக தான் இந்த ஒட்டுமொத்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக அரசை நோக்கி எந்தவொரு கேள்வியையும் ஸ்டாலின் முன்வைக்கவில்லை.

இதுபோக, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் கைதுக்கும் ஸ்டாலின் கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை. இது இப்படியென்றால். மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்ட பதிவில், இளைஞர்கள் மீது காவல்துறை காட்டிய அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின்  கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, அரசு தனது காவல்துறையைக் கொண்டு பதிலடி கொடுக்கிறது குறிப்பிட்டு இருந்தார்.  அதவாவது திமுக பின்பற்றி வந்த ஒன்றிய அரசு என்பதோ, அரசுக்கு கண்டனம் என்பதோ அந்த பதிவில் இல்லை.

இதையெல்லாம் பார்க்கும் போது  கோ.கு.கவின் அப்பனும் மகனும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க தயாராகி விட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *