BJP: மறியல் போராட்டம்!

கள்ளக்கிணறு கொலை குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சியினர்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை வெட்டிக் கொலை செய்த கொலை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் மெத்தனப்போக்கோடு செயல்படுவதாகக் குற்றச்சாட்டு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து முன்னணி சேர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அங்குப் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *