வர்த்தகத்தை இரட்டிப்பாக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு!

இந்தியா – வடக்கு மாசிடோனியா வர்த்தகக் கூட்டாண்மைப் பல்வேறு துறைகளில் சிறப்பான வாய்ப்புகளைக் கொண்டவையாகத் திகழ்கிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்கோப்ஜே நகரில் நடைபெற்ற இந்தியா-வடக்கு மாசிடோனியா வர்த்தகக் கருத்தரங்கில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தத் தசாப்தத்தின் இறுதிக்குள் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக அளவை இரட்டிப்பாக்குவதை ஒரு லட்சிய இலக்காக நிர்ணயிக்குமாறு இரு தரப்பையும் கேட்டுக்கொண்டார்.
இந்தியா மற்றும் வடக்கு மாசிடோனிய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டாண்மைக்கு, மருந்தியல், சுகாதாரப் பராமரிப்பு, வேளாண் பதப்படுத்துதல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, படைப்பாற்றல் துறை மற்றும் பசுமை ஆற்றல் மாற்றம் ஆகிய துறைகள் சிறப்பான வாய்ப்புகளைக் கொண்டவையாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *