மாணவர்கள் மீதான தாக்குதல், பிரதமர் மோடி தப்பிக்க முடியாது – ராகுல்காந்தி!

மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் மீதான தாக்குதலாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் மீதான தாக்குதலாகும் என்று குற்றம்சாட்டியுள்ளார். இதற்குப் பிரதமர் மோடி பதிலளிக்காமலும், எந்த விளைவுகளையும் சந்திக்காமலும் தப்பித்துவிடலாம் என்று நினைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த முறை அவரால் கண்டிப்பாக முடியாது என்றும், இந்திய மாணவர்களின் குரலைப் புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நம் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு தேசப்பற்றுள்ள இந்தியருக்கும் நான் கோரிக்கை விடுவதாகவும், பிரதமரின் இல்லத்தின் முன் நடைபெறும் தங்கள் தர்ணாவில் இணையுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *