ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்களுக்கு விருப்பம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான மோதலைத் தணித்து, முறிந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்காக, ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர், ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த மிகவும் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், முறையான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராகும் வரை பேச்சுவார்தையில் தங்களுக்கு ஆர்வம் இல்லை என்று கூறினார்.
மேலும், போரினால் ஈரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை முடிவுக்கு கொண்டுவரவே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு துடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


