Lok Sabha Elections 2024: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 702 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட தாம்பரம் பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களைக் கொண்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர்வரை நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதைச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற துண்டு பிரசுரங்களைக் கடைக்கடையாக விநியோகித்த அவர் பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் நேற்று வேட்பு மனு தாக்கல் மீதான மனு ஏற்பு முடிக்கப்பட்டது 32 நபர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் பரிசீலனை முடிக்கப்பட்டுள்ளதது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 2085  வாக்கு சாவடிகள் உள்ளது அதில் 702 வாக்குச் சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வாக்குச்சாவடிகளில் மட்டும் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் தேவைப்பட்டால் மத்திய பாதுகாப்பு படையும் பயன்படுத்தப்படும்.

அமைதியான முறையில் சிறப்பாகவும் தேர்தல் நடைபெற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100 சதவிகிதம் மக்கள் வாக்களிக்க வர வேண்டும் என்பதற்காகப் பல இடங்களில் விழிப்புணர்வு பேரணி மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாகப் பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்குச் சக்கர நாற்காலி போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரையில் சிறப்பாகத் தேர்தல் நடைபெற வேண்டிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தேர்தல் பறக்கும் படைமூலம் கைப்பற்றப்படும் பணங்கள் முறையான ஆவணங்களைப் பொதுமக்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவருடைய பணம் எந்தச் சிரமமுமின்றி உடனடியாகத் திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்கு செலுத்துவதற்கான படிவமும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டமானது மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சக்கர நாற்காலிகள்மூலம் வாக்குச்சாவடிக்குள் செல்வதற்கு சாய்வான பாதையும் அமைக்கப்பட உள்ளது 1600 சக்கர நாற்காலிகள் தேவைப்படும் எனக் கணக்கிட பட்டுள்ளது 400 சக்கர நாற்காலிகள் தற்சமயம் நம்மிடம் உள்ளது மீதமுள்ளவை வாங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வங்கிகள் மூலமாக ஏதேனும் சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் நடைபெறுகிறதா அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அனைத்து வங்கிகளின் தலைமை அதிகாரிகளுக்கும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இடையூறின்றி நடைபெற தேவையான வாக்கு இயந்திரங்கள் விட 20 சதவிகிதம் அதிகப்படியாக இருக்க வேண்டும் என்பது தேர்தல் விதி அதைவிட அதிகமான வாக்கியங்கள் நம்மிடம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *