தமிழகமும் புதுச்சேரியும் அதிமுக வசம்..!

தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி தான் என்று மக்கள் பேச தொடங்கி விட்டனர், இதேபோல் புதுச்சேரியிலும் மக்கள் பேச தொடங்கி விட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அதிமுக முன்னாள் வேளாண் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி வருகின்றது என்றும், அன்றைய தினம் தேர்தல் பணிகள் இருப்பதினால் முன்னதாகவே சனிபகவானை தரிசனம் செய்ய வந்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழகம் எடப்பாடியாரின் கையில் பத்திரமாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி தான் என்று மக்கள் பேச தொடங்கி விட்டனர். இதேபோல், புதுச்சேரியிலும் மக்கள் பேச தொடங்கி விட்டனர் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *