Nayanthara: ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்!

Advertisements

நடிகை நயன்தாரா பாலிவுட்டில் நடைபெற்ற விருது விழாவில் ஹாலிவுட் ஹீரோயின் போல் உடையணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் நயன்தாரா. ஐயா படம்மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நயன்தாரா, பின்னர் ரஜினிக்கு ஜோடியாகச் சந்திரமுகி படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இவர் நடித்த இரண்டு படங்களும் ஹிட் ஆனதால் ராசியான ஹீரோயின் எனப் பெயரெடுத்த நயனுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.

பின்னர் விஜய்க்கு ஜோடியாக வில்லு, அஜித்துடன் பில்லா என டாப் ஹீரோக்களின் படங்களில் கவர்ச்சியிலும் புகுந்து விளையாடிய நயன்தாரா, சிம்பு, பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். இருப்பினும் அவரின் இந்த இரண்டு காதலும் தோல்வியில் தான் முடிந்தது.

இதையடுத்து நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்ட நயன்தாரா, சுமார் 7 வருட காதல் வாழ்க்கைக்கு பின்னர் அவரைக் கடந்த 2022-ம் ஆண்டு கரம்பிடித்தார். அந்த ஜோடிக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

திருமணத்துக்குப் பின்னர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா, அங்கு முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அட்லீ இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகிப் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

முதல் படத்திலேயே ரூ.1000 கோடி வசூலை அள்ளி மாஸ் காட்டிய நயன்தாரா, அடுத்தடுத்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது. ஆனால் நயன்தாரா, கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன் என்கிற முடிவில் தீர்க்கமாக உள்ளார். கோலிவுட்டிலும் நயன் கைவசம் மூன்று திரைப்படங்கள் உள்ளன.

இந்த நிலையில், பாலிவுட்டில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட நயன்தாரா, பிளாக் நிற கவர்ச்சி ஆடையில் அச்சு அசல் ஹாலிவுட் ஹீரோயின் போல் வந்து மாஸ் காட்டி இருக்கிறார். அந்த ஆடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *