கரூரில் பாஜகவினர் அதிரடி கைது..!

கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 70க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது ராகுல் காந்தி மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்  ஜோதிமணி ஆகியோர் உருவ பொம்மைகளை எரிக்க முயன்றதால் காவல்துறையினருக்கும் மற்றும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இது குறித்து பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் செய்தியாளர்களிடம் பேசியபோது, பிரதமர் மோடி மக்களின் பேராதரவை பெற்று ஆட்சி நடத்துவது பொறுக்க முடியாமல் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வரும் ராகுல் காந்தி, மற்றும் கரூருக்கு ஏதும் செய்தாத கரூர் நாடளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் பாராளுமன்றத்தில் தகாத செயலில் ஈடுபட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகத் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *