கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாபெரும் போராட்டம்..!

ரயில்வே தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என எஸ்.ஆர்.இ.எஸ். சங்கத்தின் நிர்வாக தலைவர் சூரிய பிரகாஷ்  தெரிவித்துள்ளார்.

சென்னை, பெரம்பூரில் உள்ள ரயில்வே சங்க அலுவலகத்தில் எஸ்.ஆர்.இ.எஸ். சங்கத்தின் 107 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இதில், சங்கத்தின் நிர்வாக தலைவர் சூரிய பிரகாஷ் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில்,  ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.

அப்போது, ரயில்வே சங்கத்தின் சார்பில், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சங்கத்தின் நிர்வாக தலைவர் சூரிய பிரகாஷ்  பேசியபோது, ஓய்வூதிய திட்டம் ரயில்வே துறையில் பணிபுரிந்த வாரிசுகளுக்கு வேலை போன்ற பல்வேறு திட்டங்களில் தொடர்ந்து மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதனை அலுவலகத்தில் எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிற்சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும், ரயில்வே தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மத்திய அரசு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால்  தென்னக ரயில்வே முழுவதும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *