இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்துள்ளதாக மோடி பேச்சு..!

பிரதமர் நரேந்திர மோடி  இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்துள்ளது என்று  கூறியுள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி 2014 க்கு முன்பு உலகப் பொருளாதாரத்தில் நாம் பத்தாவது இடத்தில் இருந்தோம்.

ஆனால் இன்று உலகின் மூன்றாவது பெரியப் பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகின்றது. மேலும் “ஆபரேஷன் சிந்தூர்’ திட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளின் எஜமானர்களின் வீடுகள் 22 நிமிடங்களுக்குள் தரைமட்டமாக்கப்பட்டன. பின்னர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த புதிய வடிவ இராணுவ சக்தியால் உலகம் முழுவதும் இந்தியா மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளது.

மேலும் உலக மக்களை நான் சந்திக்கும் போதெல்லாம் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் மீதான உலகின் ஈர்ப்பு அதிகரித்து வருகிறது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *