
வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட 3 இலட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 239கோடியே 60 இலட்சம் ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடாக வழங்கப்பட உள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி அரங்கத்தையும் உழவர் நலச் சேவை மையங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பயனாளிகளுக்கு வேளாண் நலத்திட்டங்களையும் வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட 3 இலட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 239 கோடியே 60 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.



