
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது மதச்சார்பற்ற தமிழகமாக இருக்க வேண்டுமா? அல்லது இந்துத்துவத் தமிழகமாக மாற வேண்டுமா? என்பதற்கானது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இச்சடியில் துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள் மெய்யநாதன், கோவி செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், வரும் சட்டமன்றத் தேர்தல் என்பது மதச்சார்பற்ற தமிழகமாக இருக்க வேண்டுமா? அல்லது இந்துத்துவத் தமிழகமாக மாற வேண்டுமா? என்பதற்கானது எனக் கூறினார்.
இந்தத் தேர்தல் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நடக்கும் போட்டி என்றும் குறிப்பிட்டார்.


