Sri Lankan Tamils: புதிய வீடுகளை திறந்து வைக்கிறார் முதல்வர்!

இலங்கைத் தமிழா் முகாம்களில் ஆயிரத்து 591 புதிய வீடுகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைத் திறந்து வைக்கிறார்…

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக, தமிழக அரசு சாா்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு, நவம்பா் மாதம் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக, 142.16 கோடி ரூபாயில் மொத்தம் 3 ஆயிரத்து 510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளைப் பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, வேலூரில் உள்ள இலங்கைத் தமிழா் முகாமில் நாளைக் காலை நடக்கிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலிக் காட்சிமூலம், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழா் முகாம்களில், மொத்தம் 79.70 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 591 புதிய வீடுகளைத் திறந்து வைக்கிறார்.

தொடா்ந்து, பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் தி.மு.க. முப்பெரும் விழா நாளைக் காலைத் தொடங்கி இரவுவரை நடைபெற உள்ளது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முத்தமிழறிஞா் கலைஞா் அறக்கட்டளை சாா்பில், தமிழகத்தின் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூா்களில் கட்சி பணியைச் சிறப்பாகச் செய்த தலா ஒருவருக்கு நற்சான்றிதழ், பண முடிப்புகளை வழங்குகிறார்.

மேலும், தி.மு.க. சாா்பில் பெரியாா் விருது கி.சத்தியசீலன், அண்ணா விருது க.சுந்தரம், கலைஞா் கருணாநிதி விருது ஐ.பெரியசாமி, பாவேந்தா் பாரதிதாசன் விருது மல்லிகா கதிரவன், பேராசிரியா் க.அன்பழகன் விருது ந.ராமசாமி ஆகியோருக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *