இரட்டை நிலைப்பாடு எடுத்தவர்களுக்கு அமைச்சர் பதவியா? – வைகோ அதிரடி.!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு  ஆதரவு அளிப்பது குறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே நேற்று நான் சொன்ன கருத்துக்களை சிலரால் தாங்கிக் கொள்ள முடியாமல் கோபப்படுகிறார்கள்” என்று முக்கிய அரசியல் தலைவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களம் தற்போது தவெக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான விவாதங்களால் சூடேறியுள்ள நிலையில், இந்த அறிக்கை மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், திமுக கூட்டணியில் நீடிக்கும் சில கட்சிகளின் இரட்டை நிலையை கடுமையாக விமர்சித்தார். “மற்ற சில அரசியல் கட்சிகள், வெளியில் திமுக கூட்டணியில் இருந்துகொண்டே, உள்ளுக்குள் தவெக-வுக்கு தங்களின் ஆதரவைக் கொடுத்து வருகின்றன.

அப்படி இரட்டை நிலைப்பாடு எடுத்தவர்கள் இன்று அமைச்சரவையிலும் இடம் பிடித்துவிட்டார்கள். ஆனால், நாங்கள் அப்படிப்பட்ட அரசியல் செய்யவில்லை; நேர்மையாக இருக்கிறோம்” என்று சாடினார். தொடர்ந்து பேசிய அவர், தனது இந்த கருத்துக்களால் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி குறித்துக் குறிப்பிடுகையில், “திமுக சகோதரர்கள் என் மீது கோபப்பட்டாலும், அதை நான் தவறாகப் பார்க்கவில்லை.

அவர்கள் என் மீது வைத்துள்ள உரிமையோடுதான் கோபப்படுகிறார்கள் என்றே நான் எடுத்துக் கொள்கிறேன்” என்று சுதாரிப்பாகப் பதிலளித்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி மாற்றங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்து வரும் வேளையில், இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *