
சென்னையிலிருந்து நெல்லை வரச் செல்லும் வந்தே பாரத் இரயிலின் பெட்டிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ள்து.
இந்தியா முழுவதும் வந்தே பாரத் இரயில்கள், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், அதிவேகப் பயணம், விமான சேவைக்கு இணையானக் கட்டமைப்பு எனப் பல்வேறு காரணங்களால் வந்தே பாரத் இரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பின்னர் பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லையெனப் பயணிகளிடமிருந்து புகார் எழுந்துள்ளது. இதனால், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக, இரயில்வே வாரியத்தின் மக்கள் தொடர்பு துறைச் செயல் இயக்குனர் தீலிப்குமார் பேசியபோது, மங்களூரு சென்டிரல்-திருவனந்தபுரம், செகந்திராபாத்-திருப்பதி, சென்னை எழும்பூர்-நெல்லை ஆகிய 3 வழித்தடங்களில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும். மேலும் வந்தே பாரத் ரெயில்கள் 20 பெட்டிகளாகவும், மீதமுள்ள மதுரை-பெங்களூரு கான்ட், தியோகர்-வாரணாசி, ஹவுரா-ரூர்கேலா மற்றும் இந்தூர்-நாக்பூர் ஆகிய 4 வழித்தடங்களில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும். இதைத் தொடர்ந்து வந்தே பாரத் இரயில்கள் 16 பெட்டிகளாகவும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

