
தெலங்கானா மாநிலம் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும், கடின உழைப்பாளிகளான மக்களையும் கொண்டது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெலங்கானா மாநில உருவாக்க தினத்தையொட்டி, தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், மாநில உருவாக்க தினத்தில் தெலங்கானா மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். தெலங்கானா மாநிலம் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும், கடின உழைப்பாளிகளான மக்களையும் கொண்டது என்று கூறினார்.
மேலும், இம்மாநிலம் பல ஆண்டுகளாகப் புதுமை மற்றும் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார். தெலங்கானா மக்கள் தொடர்ந்து முன்னேற்றத்துடனும், நல்வாழ்வுடனும் வாழ வாழ்த்துவதாகக் கூறினார்..



