இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜப்பானுக்கு செல்கிறார் பிரதமர்!

Advertisements

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜப்பானுக்குச் சென்றுள்ளார்.

டெல்லியிலிருந்து தனி விமானம்மூலம் ஜப்பான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்தார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு பரதநாட்டிய கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வறவேற்பு அளித்தனர். பின்னர், ஜப்பானில் நடைபெறும் 15 ஆவது இந்தியா மற்றும் ஜப்பான் வருடாந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு இருநாட்டு உறவு, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள்குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

மேலும், பிரதமர் மோடி ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு  31 ஆம் தேதி சீனாவிற்குச் சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார். பின்னர், மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பல்வேறு தலைவர்களைப் பிரதமர் மோடி சந்திக்கிறார். மேலும், இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *