டயமண்ட் லீக் கோப்பை போட்டி- நீரஜ் சோப்ராவுக்கு இரண்டாவது இடம்!

டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று நடைபெற்றது. இப்போட்டியில், ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஜூலியன் வெபர், முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜூலியஸ் யெகோ மற்றும் கெஷோர்ன் வால்காட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்திய வீரரான நீரஜ் சோப்ரா 85.01 புள்ளி மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாவது இடம் பிடித்தார். மேலும், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.51 புள்ளி மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தையும், டிரின்பாகோவைச் சேர்ந்த கெஷோர்ன் வால்காட் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *