Today Gold Rate: ரூ.53ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை இன்று (ஏப்.6) ஒரே நாளில் ரூ.840 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.52,920 எனும் புதிய உச்சத்தை எட்டியது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாகக் குறைந்த தங்கம் விலை, அக்டோபர் 4-ம்தேதி பவுன் ரூ.42,280 என விற்பனையானது.

இந்நிலையில்  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வார தொடக்கமான முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,660-க்கும் சவரன் ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *