Congress : நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும்!

Advertisements
பகல்காம் படுகொலையையடுத்து ஏற்பட்டுள்ள சூழல் குறித்து விரிவாக விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூடிய விரைவில் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ச்சுன கார்கே. பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், பகல்காம் கொடூரத் தாக்குதலையடுத்து எழுந்துள்ள சூழ்நிலையைச் சமாளிக்க, அனைவரின் கருத்தைத் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்று தான் நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் மல்லிகார்ச்சுன கார்கே குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு இந்தியரின் மனத்திலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிக்கலான நேரத்தில் பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாய் நிற்கிறோம் என்பதைக் காட்ட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *