CM Stalin : திமுக ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு அமைக்கும்!

திமுக ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் பேசிய அவர், திமுக அரசின் சாதனைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவற்றைப் பார்த்து வரும் மக்கள் மீண்டும் திமுகவையே ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவர் என்று தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரிக்கும் காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் ஆறாம் நாள் போலிஸ் நாளாகக் கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்தியாவில் மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 42 விழுக்காடாக உள்ளதையும் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கூறுவோர் அரசியல் ஆதாயத்துக்காக அவ்வாறு கூறுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். மணிப்பூர், காஷ்மீர், உத்தரப்பிரதேச மாநிலங்களைப் போல் இங்கு உயிரிழப்புகள் நேரவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *