
Keerthy Suresh | Chiranjeevi | Sri Reddy
நடிகை கீர்த்தி சுரேஷை சிரஞ்சீவி காதலிப்பதாகக் நடிகை ஸ்ரீரெட்டிகூறி நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளார்…

ஐதராபாத் தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள்மீது பாலியல் புகார் தெரிவித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி தெலுங்கு சினிமாவில் கோனா வெங்கட், விவா ஹர்ஷா, பவன் கல்யாண், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா, நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் நானி பின்னர் பிரபல தமிழ் இயக்குநர்களான சுந்தர்.சி, முருகதாஸ், ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார்.
இவர்ஏப்ரல் 2018 இல், ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட சேம்பர் ஆப் காமர்ஸ் முன் ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் செய்து இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டினார். நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த ஸ்ரீ ரெட்டி தற்போது மீண்டும் தனது குற்றச்சாட்டுகளைக் கூறத்தொடங்கிவிட்டார்.

தற்போது நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷை சிரஞ்சீவி காதலிப்பதாக ஸ்ரீ ரெட்டி கூறி உள்ளார்.போலா சங்கர்’ படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாகக் கீர்த்தி நடித்து உள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிரஞ்சீவியின் வார்த்தைகள் தான் ஸ்ரீ ரெட்டியை வருத்தப்படுத்தி உள்ளது. விழாவில் சிரஞ்சீவி கீர்த்தி சுரேஷின் கையைப் பிடித்துக் கொண்டு பேசும்போது இந்தப் படத்தில் மட்டும் கீர்த்தி தங்கையாக நடித்து உள்ளார். அடுத்த படத்தில் அவரை ஹீரோயினாக்க சம்மதிப்பதாகவும் சிரஞ்சீவி நகைச்சுவையாகக் கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.
ஆனால் இதுகுறித்து நடிகை ஸ்ரீரெட்டி தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- மகளின் வயது நடிகைமீது ஏன் இப்படி மோகம் கொள்கிறார். லட்சக்கணக்கானோர் முன்னிலையில் இப்படிப்பட்ட பேச்சு எப்படி சாத்தியம். இந்தக் காம ஜோக்குகளை எப்படி சொல்ல முடியும்? மவுனம் காத்தால் மரியாதை குறைந்து விடும் எனக் கூறி உள்ளார். இந்த விமர்சனத்தைச் சிரஞ்சீவியின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைச் சிரஞ்சீவி நகைச்சுவையாகக் கூறியதாகவும், திரைக்கு வெளியே கீர்த்தியை சிரஞ்சீவி தனது மகளாகவே பார்க்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

